தளபதி விஜய்யின் மாஸ்டர் லேட்டஸ்ட் அப்டேட்.. போஸ்ட் புரொடக்‌ஷன் பணி இன்று தொடங்கியது..

நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிரூத் இசை அமைத்திருக்கிறார். விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் போன்றவர்களும் நடித்திருக்கின்றனர். இப்படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதற்கான பணிகள் நடந்து வந்தபோது கொரோனா ஊரடங்கு எல்லாவற்றையும் திருப்பி போட்டது. திரையுலகில் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. இதில் மாஸ்டர் படத்தின் எடிட்டிங் பணிகளும் நிறுத்தப்பட்டன.

52 நாட்களுக்குப் பிறகு நேற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அரசு அனுமதி அளித்தது. அதன்படி நேற்று முதல் சில படங்களின் பணிகள் தொடங்கின. இன்று மாஸ்டர் படத்தின் எடிட்டிங் பணி தொடங்கியது. இப்படத்தின் ரிலீஸ் பற்றி இம்மாத இறுதியில் விஜய், லோகேஷ் கனகராஜ் அறிவிக்க உள்ளனர். முன்னதாக இப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியிடப் பேச்சு நடப்பதாக கூறப்பட்டது. அது வெறும் வதந்தி என்று படத் தரப்பு தெரிவித்துள்ளது. விரைவில் மாஸ்டர் படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.

More News >>