கொரோனாவால் ஹீரோவான வில்லன்.. ஓட்டலை அடுத்து பஸ் ஏற்பாடு செய்தார்..

அனுஷ்கா நடித்த அருந்ததி படத்தில் வில்லனாக நடித்தவர் சோனு சூட். பிரபுதேவா நடித்த தேவி படத்தில் 2வது ஹீரோவாக நடித்தார். படத்தில் வில்லனாக நடிக்கும் சோனு நிஜத்தில் பல உதவிகள் செய்து வருகிறார். மும்பை ஜுஹு பகுதியில் அவருக்குச் சொந்தமாக ஸ்டார் ஓட்டல் உள்ளது. கொரோனா காலத்தில் அந்த ஓட்டலில் தங்குவதற்கு கொரோனா பணியாற்றும் டாக்டர்கள், போலீசார், சுகாதார தொழிலாளர்கள் தங்குவதற்காக அளித்திருக்கிறார். இது தவிர மும்பையில் ஏழை, எளியவர்கள் 45 ஆயிரம் பேருக்குத் தினமும் உணவு அளித்து வருகிறார்.

மும்பை மற்றும் கர்நாடகாவில் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் செல்லமுடியாமல் தவிக்கும் தொழிலாளர்களை அவரவர்களின் சொந்த ஊருக்குச் செல்வதற்காக 10 சொகுசு தனியார் பஸ்களை ஏற்பாடு செய்து அளித்தார். அந்த பஸ்களில் புறப்பட்டவர்களை நேரில் வந்து வழி அனுப்பி வைத்தார். முறைப்படி அரசு அனுமதி பெற்று இந்த நற்பணியில் ஈடுபட்ட அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

More News >>