காதலியை கண்டுபிடித்தார் ராணா.. லண்டனில் படித்த பெண்ணை வளைத்தார்..

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்தவர் ராணா டக்குபதி. இவரும் நடிகை திரிஷாவும் காதலிப்பதாகக் கடந்த சில வருடங்களுக்கு முன் தகவல் வெளியானது. இருவரும் ஜோடியாகப் பல இடங்களுக்கு வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்தனர். சமீபத்தில் ராணா திரிஷாவை தனது பழைய தோழி என்று குறிப்பிட்டிருந்தார்.

சக ஹீரோக்கள் ஜோடியாக வலம் வந்தபோது ராணா மட்டும் ஜோடி இல்லாமல் தனிஆளாக உலா வந்துகொண்டிருந்தார். தற்போது அவர் தனது காதலியைக் கண்டு பிடித்திருக்கிறார். ஐதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் மும்பையில் வசிக்கிறார். அவருடன் செல்பி எடுத்துப் பகிர்ந்திருக்கும் ராணா, என் காதலை ஏற்றுக்கொண்டார் எனக் குறிப்பிட்டிருக்கிறார். மிஹீகா லண்டன் பல்கலையில் ஆர்ட் அண்ட டிசைன் படிப்பில் எம் ஏ பட்டம் பெற்றிருக்கிறார். அவரது தாயார் பண்ட்டி தங்க நகை டிசைன் நிறுவன வைத்து நடத்தி வருகிறார்.

More News >>