வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விஜய் பட நடிகை..

குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதுடன் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி . இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்றிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது,”என் கணவர் ராஜ்குந்த்ரா. எங்களுக்கு வியான் என்ற மகன் இருக்கிறான். இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்வதற்காகக் கடந்த 5 வருடமாக முயன்றோம். ஆனால் எனது உடல் நிலையில் உள்ள பாதிப்பால் பலமுறை கருக்கலைப்பு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையைத் தத்தெடுப்பதற்காகப் பதிவு செய்து வைத்திருந்தோம். 4 வருடம் காத்திருந்தும் பலனில்லை. பிறகுதான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தோம். சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இன்னொரு குழந்தை வேண்டும் என்று விரும்பியதற்குக் காரணம் என் மகன் வியான் தனியாக வளரக்கூடாது அவனுடன் ஒரு தம்பியோ, தங்கையோ இருக்க வேண்டும் என எண்ணினேன்.

More News >>