ஹாலிவுட் காமெடி நடிகர் ஜெர்ரி ஸ்டில்லர் காலமானார்.

ஹாலிவுட் படத்தில் 1954 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் ஜெர்ரி ஸ்டில்லர். இவர் கடந்த 60 ஆண்டுகளாக ஆங்கில திரைப்படங்களில் நடித்து வந்தார். அவருக்கு வயது 92. ஜெர்ரியின் மகன் பென் ஸ்டில்லர் தனது தந்தை இறந்த தகவல் பற்றி அறிவித்தார். அவர் கூறும்போது, ' எனது தந்தை, வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார்.அவர் எனக்குப் பெரிய உதாரணமாக வாழ்க்கையில் திகழ்ந்தார்.மேலும் கடந்த 62 வருடமாக எனது அம்மா அன்னேவுக்கு உண்மையான கணவராக வாழ்ந்து வந்தார். நாங்கள் அவரை மிகவும் மிஸ் செய்கிறோம்' என்றார்.

ஹாலிவுட் திரையுலகில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்தவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். ஒரே ஒரு முறை திருமணம் செய்து பல ஆண்டுகளாக அதாவது சுமார் 60 ஆண்டுகளாகத் தனது வாழ்க்கையை அன்னேமாறாவுடன் ஜெர்ரி ஸ்டிலெர் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 'தி கிங் ஆஃப் குயின்ஸ்' என்ற படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த வேடம் இன்றளவும் இளம் நடிகர்களால் பாராட்டப்படுகிறது.

More News >>