நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பும் ரசிகர்கள்.. போதும் நிறுத்து, ஹீரோயின் எச்சரிக்கை..

தமிழில் ஒரு நாள் இரவில், கண்ணுக்குள்ளே, திலகர் போன்ற படங்களில் நடித்திருப்பவர் அனுமோல். மலையாள நடிகையான இவர் மலையாளப் படங்களில் நடிக்கத் தான் அதிக கவனம் செலுத்துகிறார். அனுமோலின் இணைய தள பக்கத்துக்குப் பலர் ஆபாசப் படங்களை அனுப்பி அவரை கவர முயல்கிறார்களாம். அதைக்கண்டு வெறுத்துப் போனவர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

உங்களது ஆபாசப் படங்களை எனக்கு அனுப்பியது போதும் நிறுத்துங்கள். அதை பிளாக் செய்து ஓய்ந்துவிட்டேன். ஒரு நபர் மட்டும் வெவ்வேறு முகவரியிலிருந்து ஆபாசப் படத்தையும் வீடியோவையும் அனுப்பி வருகிறார். இன்னொரு முறை இப்படிச் செய்தால் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்வேன். நீங்கள் அனுப்பும் ஆபாசப் படங்களால் எந்த உணர்வும் ஏற்படப்போவதில்லை. வெறுப்புணர்வு தான் ஏற்படும் என்றார்.

More News >>