உணவின்றி அழும் குழந்தை, பணமின்றி தவிக்கும் ஏழை.. மோடிக்கு கமல்ஹாசன் எழுப்பிய கேள்வி..

பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது. இந்தியா பொருளாதார தேக்க நிலை சரிசெய்வதற்காக 20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சர் இப்பொருளாதார மீட்பு திட்டம் குறித்து விவரிப்பார். இந்த திட்டம் மூலம் நடுத்தர குடும்பங்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.

மோடியின் இந்த அறிவிப்பு குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் டிவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார். அதில் கூறியதாவது:உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம். அதே நேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>