பேட்மிண்டன் வீரரை காதலிக்கிறார் டாப்ஸி.. அடுத்த வருடம் நிச்சயதார்த்தம்?

ஆடுகளம் டாப்ஸி தற்போது இந்தியில் நடித்து வருகிறார். தனக்கென ஒர் இடத்தை பாலிவுட்டில் பிடித்திருக்கும் அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பேட்மிண் டன் வீரருடன் அவர் காதலில் விழுந்திருக்கிறார்.டென்மார்க்கை சேர்ந்தவர் மதியாஸ் போ. கடந்த ஆண்டு நடந்த பேட்மிண்டன் லீக் ஆட்டத்தில் டாப்ஸியும். மதியாஸும் சந்தித்தனர்.

டாப்ஸியின் தங்கைதான் மதியாஸை டாப்ஸிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது முதல் டாப்ஸியும், மதியாஸும் இணைய தளத்தில் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அது காதலாக மாறியிருக்கிறது. ரகசியமாக அவ்வப்போது இருவரும் டேட்டிங்கும் செய்கின்றனர். அடுத்த வருடம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று தெரிகிறது. மதியாஸை டாப்ஸியின் பெற்றோருக்கும் பிடித்துவிட்டதாம். மேலும் மதியாஸை காதலிப்பதை டாப்ஸியும் ஒப்புக்கொண்டிருக்கிறார் .

More News >>