தாங்குமா தமிழகமா? அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி?
இந்தியாவில் கொரோனா பரவல் தொற்று தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறது. ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமல்ஹாசன் தனது ஆதங்கத்தைத் தினம் தினம் வெளிப்படுத்தி வருகிறார்.
இன்று கமல் வெளியிட்டுள்ள டிவிட்டர் மெசேஜில், 'முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கொரோனா பாதிப்பில் எட்டாமிடத்திலிருந்து இரண்டாம் இடத்தை எட்டிப் பிடித்துவிட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு மதுக் கடைகளைத் திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு. தாங்குமா தமிழகம் இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.