தடுமாறி விழுந்த டி வில்லியர்ஸ் - மனிதாபிமானமற்று நடந்துகொண்ட ஆஸி. வீரர்

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் போது, டி வில்லியர்ஸ் ரன் அவுட் செய்யப்பட்ட பிறகு நாதன் லயன் நடந்துகொண்ட விதம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை தோற்கடித்தது. போட்டியின், 2ஆவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ் ரன் எடுக்க ஓடினார்.

அப்போது, ஆஸ்திரேலிய வீரர் டி வார்னரின் அட்டகாசமான துரோவின் உதவியால் பந்துவீச்சாளர் நாதன் லயன் ரன் அவுட் செய்தார். ரன் அவுட்டை தவிர்ப்பதற்காக வேகமாக ஓடிய டிவில்லியர்ஸ் தடுமாறி கீழே விழுந்தார்.

ஆட்டமிழந்தவுடன் சோகத்தில் படுத்திருந்த டிவில்லியர்ஸ் மீது மனிதாபிமானம் இல்லாமல் பந்தை வீசினார் லியோன். லியோனின் இந்த மோசமான செயலால் கடுப்படைந்த போட்டி நடுவர் உடனடியாக ஐசிசி-க்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் போட்டி நடுவர் எடுத்த நடவடிக்கையில் லியோனின் இந்த செயல் தவறானது என உறுதி செய்துள்ளார். இதனால் லியோனுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமும் இரண்டு புள்ளிகளும் குறைக்கப்படும் என தெரிகிறது.

More News >>