நலிந்த நாடக நடிகர்களுக்கு ரூ 25 லட்சம் உதவி.. தந்தை நினைவு நாளில் ஐசரி கணேஷ் அளித்தார்..

தமிழக முன்னாள் துணை அமைச்சரும் மறைந்த நடிகருமான ஐசரிவேலன் 33ஆம் ஆண்டு நினைவு நாள் நடந்தது.தன் தந்தையின் நினைவு தினத்தையொட்டி ஆண்டுதோறும் மே 14ம் தேதி வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவன படத் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ், ஆயிரக்கணக்கான நலிந்த நாடக நடிகர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு அறுசுவை உணவும் புத்தாடைகளும் வழங்குவது வழக்கம்.

இவ்வாண்டு கோவிட் 19 (கொரோனா) பெரும் தொற்றின் காரணமாகப் பல நாடக நடிகர்கள் வாழ்வாதாரத்திற்குப் போராடுவதால் இவ்வாண்டு, ரூபாய் 25 இலட்சத் தினை அவரவர் வங்கிக் கணக்கிற்கு 1000 ரூபாய் வீதம் 2500 கலைஞர்களுக்கு நேரடியாகச் செலுத்தியுள்ளார் டாக்டர் ஐசரி கே. கணேஷ்.சென்ற மாதம் நடிகர் சங்கத்தின் நலிந்த நாடக நடிகர்களுக்காக ரூபாய் 10 லட்சத்தை நன்கொடையாக அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>