விக்னேஷ் சிவனை விமர்சித்தாருக்கு இயக்குனர் ஜென்டிலான பதிலடி..

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். அன்னையர் தினத்தன்று நயன்தாரா ஒரு குழந்தையைக் கையில் வைத்திருக்கும் படத்தை வெளியிட்ட விக்னேஷ்சிவன் அவருக்கு (நயன்தாராவுக்கு) அன்னையர் தின வாழ்த்துக் கூறியதுடன். எனது வருங்கால குழந்தையின் தாய்க்கும் வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.அதேபோல் நயன்தாராவின் தாயாருக்கும் வாழ்த்துக் கூறிய விக்னேஷ்சிவன், ஒரு நல்ல குழந்தையை பெற்று வளர்த்திருக்கிறீர்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு வாழ்த்துக்களையும் கண்ட நெட்டிஸன் ஒருவர், உன் அம்மாவுக்கு வாழ்த்து சொல்லவேண்டியதுதானே? என்று தகாத வார்த்தையில் விக்னேஷ் சிவனைத் திட்டி இருந்தார். அதைக் கண்ட விக்னேஷ்சிவன் ஜென்டிலாக அந்த நெட்டிஸனுக்கு பதிலடி கொடுத்தார். அதில், உன் அம்மாவுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். உன்னைப் போல் ஒரு நல்ல, இரக்கமுள்ள. நாகரீகம் தெரிந்த பிள்ளையை பெற்றிருக்கிறார் அல்லவா அதற்காக எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>