இந்தியாவுக்கு அதிக வெண்டிலேட்டர்கள் சப்ளை.. அமெரிக்க அதிபர் பேட்டி..

இந்தியாவுக்கு அதிக அளவில் வெண்டிலேட்டர்கள் சப்ளை செய்து வருகிறோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்த நோயால் அமெரிக்கா அதிக அளவில் பாதித்துள்ளது. இந்நிலையில், இந்த நோய் குறித்து சீன அரசு முன்கூட்டியே எச்சரிக்கத் தவறி விட்டது என்றும், இந்த வைரஸ் வேண்டுமென்றே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்றும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சீனாவுடன் உறவை முற்றிலும் துண்டிக்கத் தயார் என்று கூட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார்.

இந்த சூழலில், டொனால்டு டிரம்ப் இன்று அளித்த பேட்டியில், இந்தியாவுக்கு ஏராளமான வென்டிலேட்டர்களை அளித்து வருகிறோம். நான் பிரதமர் மோடியுடன் பேசினேன். அவர் எனது இனிய நண்பர். அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் சிறந்தவர்கள். நாங்கள் இந்தியர்களுடன் சேர்ந்து கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து வருகிறோம் என்று கூறினார்.முன்னதாக, அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும், இந்தியாவுக்கு அதிகமான வென்டிலேட்டர்களை அளித்துள்ளோம். கொரோனா வைரஸ் பரவியிருக்கும் இந்த சிக்கலான நேரத்தில், இந்தியாவுடன் சேர்ந்து கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போராடி வருகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

More News >>