நாடு முழுவதும் 86 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு...

நாடு முழுவதும் இது வரை 85,940 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது.சீனாவின் உகான் நகரில் தோன்றி, உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இன்னும் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. தினமும் புதிதாக 3, 4 ஆயிரம் பேருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே 16) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் இது வரை மொத்தம் 85,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 30,153 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 2752 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 3970 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதே போல், நேற்று மட்டும் கொரோனா பாதித்த 102 பேர் பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று 1576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து மொத்தம் 29,100 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில், 6564 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று உயிரிழந்த 49 பேரையும் சேர்த்து மொத்தம் 1068 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 10,108 பேருக்கு கொரோனா பாதித்ததில், 71 பேர் பலியாகியுள்ளனர்.

More News >>