மாஸ்டர் படத்துக்காக தியேட்டர்கள் வெயிட்டிங்.. லோகேஷ் கனகராஜ் டீமிற்கு புது உத்தரவு..

கொரோனா ஊரடங்கால் முடங்கிய தமிழ் திரையுலகம் மூச்சுவிடாத் தொடங்கியிருக்கிறது. சில தினங்களுக்கு முன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கின. வரும் 17ம் தேதிக்கு பிறகு படப் பிடிப்பு தொடங்குவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதில் இப்படி அப்படி அசைய முடிந்தளவுக்குச் சிக்கிக் கொண்டிருக்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். எப்போது தியேட்டர்கள் திறக்கப்படும், எவ்வாறு ரசிகர்களை அனுமதிப்பது என்று எந்த முடிவும் கிடைக்காமல் குழப்பத்தில் உள்ளனர்.

இதற்கிடையில் ஒ டி டி தளங்கள் புதிய படங்களை வாங்கி ரிலீஸ் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இது தியேட்டர் அதிபர்களுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது சினிமா தியேட்டர்கள் ஜூன் அல்லது ஜூலையில் திறக்க அனுமதிக்கப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. பெரிய படத்தை ரிலீஸ் செய்தால் தான் ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுக்க முடியும் என்ற எண்ணத்தில் அவர்கள் இருகின்றனர். குறிப்பாகத் தளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்துக்காகக் காத்திருக்கின்றனர்

இதையடுத்து மாஸ்டர் படக் குழுவினர் படத்தின் எடிட்டிங் பணியை முடிப்பதில் வேகம் காட்டி வருகின்றனர். இதையடுத்து கிராபிக்ஸ் பணிகளையும் முடித்து தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக படத்தின் பிரதியை கையில ஒப்படைக்க வேண்டும் என்று படக் குழுவினருக்கு லோகேஷும், தயாரிப்பாளரும் உத்தரவிட்டுள்ளோர்களாம்.

More News >>