வெயிட் போட்ட சாயிஷா.. தீபிகா பாடலுக்கு நடனம்..

காப்பான் பட ஹீரோயின் சாயிஷா தமிழில் சில படங்களே நடித்த நிலையில் நடிகர் ஆர்யாவை காதலித்து மணந்தார். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் சாயிஷா ஆர்யாவுக்கு வித விதமாக, பிரியாணி ஐஸ் கிரீம் செய்து ஆர்யாவுக்குத் தந்து அவரை வெயிட் போட வைத்திருக்கிறார். அதேசமயம் சாயிஷாவும் ஒரு பிடி பிடிக்கிறார். ஒல்லியாக இருந்த சாயிஷா தற்போது அனுஷ்காபோல் வெயிட் போட்டிருக்கிறார்.

வீட்டில் இருக்கும் சாயிஷா இந்தியில் தீபிகா படுகோன் நடித்த "பஜிராவ் மஸ்தானி" படத்தில் பாடல் ஒன்றுக்கு ஆடிய நடனத்தை ஆடி வீடியோ வெளியிட்டிருக்கிறார். அழகான அசைவுகளுடன் ஆடினாலும் சாயிஷா வெயிட்போட்டு குண்டாகி இருப்பது கண் கூடாகத் தெரிகிறது. இப்படியே விட்டால் அனுஷ்கா வெயிட் போட்டு விட்டு அதைக் குறைக்க முடியாமல் அவதிப்படுவது போல் சாயிஷாவும் அவதிப் பட வேண்டி இருக்கும் என்று அவரது நல விரும்பிகள் அட்வைஸ் செய்திருக்கின்றனர்.

More News >>