சூர்யா நடிக்கும் அயன் 2ம் பாகம்.. கே.வி. ஆனந்த் ஸ்ரிகிப்ட் ரெடி செய்கிறார்..

சூர்யா நடித்த காப்பான் படத்தை இயக்கியவர் கே.வி.ஆனந்த் . ஏற்கனவே இந்த கூட்டணி அயன், மாற்றான் ஆகிய படங்களில் இணைந்திருக்கிறது. தற்போது 4 வது முறையாக இணையவிருக்கிறது.

சூர்யா நடித்த அயன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் பிரபு, தமன்னா ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படத்தின் 2 பாகம் உருவாக்க இயக்குனர் திட்டமிட்டிருக்கிறார். இப்படத்தில் கே.வி.ஆனந்த்துடன் மீண்டும் சூர்யா இணைகிறார். இதற்கிடையில் சூர்யா நடித்திருக்கும், சூரரைப்போற்று திரைக்குவர தயாராக இருக்கிறது, இதைச் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இது தவிர வெற்றி மாறன் இயக்கும் வாடி வாசல், ஹரி இயக்கும் அருவா ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் சூர்யா.

More News >>