தலைவி படத்தில் மற்றொரு பிரபல நடிகை.. ஜெ வாழ்க்கை கதை ஷுட்டிங் வெயிட்டிங்..

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் தலைவி படத்தை விஜய் டைரக்ட் செய்கிறார். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதில் மற்றொரு முக்கிய பாத்திரத்தில் பாக்யஸ்ரீ நடிக்கிறார்.பாக்யஸ்ரீ இந்தியில், மைனே பியார் கியா படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடித்தார். அதன் பிறகும் சில இந்தி படங்கள் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தார்.

இவர் தமிழில் நடிப்பது பற்றிக் கூறியதாவது:அதிக படங்களில் நடிக்காதது ஏன் என்கிறார்கள். சினிமாவை விட்டு நான் விலகவில்லை. அதன் வடிவம்தான் டிவி சீரியல், வெப் சீரிஸ் என்று மாறியிருக்கிறது. தமிழில் தலைவி படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரம் 80, 90 களில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. நிஜபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதேபோல் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் படத்தில் நடிக்கிறேன். எனக்கு மொழி தெரியாவிட்டாலும் வசனங்களை மனப்பாடம் செய்துகொண்டு நடிக்கிறேன். நிறையப் படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. மேற்சொன்ன இந்த 2 படங்களும் பெரிய படங்கள் என்பதால் தியேட்டரில் வெளியாகும் மீண்டும் நடிக்க வந்ததில் சந்தோஷம். நல்ல பாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்.கொரோனா தடை காலம் என்பதால் 2 படங்களின் படப்பிடிப்பு இன்னும் பாக்கி இருக்கிறது.

இவ்வாறு பாக்யஸ்ரீ கூறினார்.

More News >>