அருண் விஜய் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. ஒருபோதும் இதைச் செய்யாதீர்கள்..

நடிகர் அருண் விஜய், கொரானா ஊரடங்கில் வீட்டில் இருக்கிறார். அதேநேரம் தனது உடற்கட்டைப் பராமரிக்கத் தினமும் கடுமையான உடற்பயிற்சிகள் செய்கிறார். அடிக்கடி அந்த வீடியோக்களை நெட்டிலும் பகிர்கிறார். மொட்டை மாடியில் உயரம் தாண்டி குதிக்கும் ஆபத்தான பயிற்சிகள் மேற்கொள்கிறார். அவரை சிலர் கவனமாகப் பாதுகாப்பாக உடற்பயிற்சி செய்யுங்கள் என்று எச்சரித்தனர்.

இந்நிலையில் உயரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். அதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். தலைகீழாகத் தொங்கியபடி அவர் உடற் பயிற்சி செய்யும்போது திடீரென்று அந்த மிஷின் கழன்று விட மேலிருந்து தலைகீழாகத் தரையில் விழுந்து இரண்டு கால் முட்டிகளிலும் அடிபட்டு சுவர் ஓரமாக ஓய்ந்து அமர்கிறார் அருண். இதுபற்றி அருண் விஜய் கூறும்போது, இதை ஒருபோதும் முயற்சிக்காதீர்கள். உடற்பயிற்சி செய்வதற்கு முன் அந்த மிஷின் சரியாக இருக்கிறதா என செக் செய்யுங்கள். அப்படிச் செய்யாததால்தான் நான் கீழே விழுந்த இந்த சம்பவம் நடந்தது. நல்ல வேளையாகத் தலையில் அடிபடவில்லை. இரண்டு கால் முட்டிகளிலும் அடிபட்டதில் வீங்கி விட்டது. அது குணம் ஆக இரண்டு வாரம் ஆனது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>