இயக்குனருக்கு மது விருந்து வைக்கும் நடிகை.. டிவிட்டரில் அனுப்பிய கிக் மெசேஜ்..

நடிகை சார்மி கொரோனா ஊரடங்கில் குடும்பத்தினருடன் லாக்டவுன் காலத்தைக் கழித்து வருகிறார். அவருக்கு நேற்று 33வது பிறந்த தினம். நண்பர்கள். தோழிகள் நிறைய கேக் அனுப்பி வைத்ததுடன் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் பகிர்ந்தனர். இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது வாழ்த்தில், சார்மி, எப்போதுமே அழகாக இருக்கும் பெண்களுக்கு நான் பிறந்த நாள் வாழ்த்து சொல்வதில்லை என மறைமுகமாகத் தனது வாழ்த்தைத் தெரிவித்திருந்தார். அதைக் கண்ட சார்மி, சார், உங்களுக்காக வோட்கா (மது)காத்திருக்கிறது. ரொம்ப நாட்களாக பார்ட்டியே இல்லை என்ன செய்வது என கிக்கான பதில் அளித்திருக்கிறார். மேலும் தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில வருடங்களாகவே நடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார் சார்மி தயாரிப்பாளராக மாறி இயக்குனர் புரி ஜெகனாத்துடன் இணைந்து படங்களைத் தயாரித்து வருகிறார். சமீபத்தில் ஐஸ்மார்ட் படத்தை தயாரித்த அவர் அடுத்து விஜயதேவர கொண்டா, அனன்யா பாண்டே நடிக்கும் பைட்டர் என்ற படத்தைத் தயாரிக்கிறார் .

More News >>