ஹீரோவுக்கு சர்ப்ரைஸ் தர காத்திருக்கும் பிரபல இயக்குனர்..

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வருகிறது ஆர் ஆர் ஆர் திரைப்படம். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது. இதில் ஜூனியர் என் டி ஆர். ராம்சரண் இணைந்து நடிக்கின்றனர். மேலும் அலியாபட், அஜய்தேவ்கன், ஒலிவியா மோரிசன் போன்றவர்கள் நடிக்கின்றார்கள். வரும் 20ம்தேதி இப்படத்தின் ஹீரோ ஜூனியர் என் டி ஆரின் பிறந்ததினம். அன்றைய தினம் அவருக்கு சர்ப்ரைஸ் தர இயக்குனர் எண்ணி உள்ளார். கோமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என் டி ஆர் நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் ஜுனியர் என் டி ஆரின் கெட்டப் புகைப்படத்தை வெளியிட உள்ளார்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ராம்சரண் தனது 35வது பிறந்ததினத்தை கொண்டாடினார். அப்போது ராம் சரண் இப்படத்தில் ஏற்று நடிக்கும் அல்லூரி சீதாராம ராஜூ கதாபாத்திர கெட்டப் ஸ்டில் வெளியிட்டார் ராஜமவுலி.ஆர் ஆர் ஆர் படம் வரும் 2021 ஜனவரி 8ம் தேதி வெளியிடத் தயாரிப்பாளர்கள் எண்ணியிருந்தனர். கொரோனா லாக் டவுனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருப்பதால் படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க எண்ணி உள்ளனர்.

More News >>