ராஷ்மிகா பார்த்த முதல் விஜய் படம் எது தெரியுமா? தளபதி ரசிகர்கள் ஹேப்பி கமென்ட்

நடிகர் ராஷ்மிகா டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் ஆகிய தெலுங்கு படங்களில் விஜயதேவர கொண்டா ஜோடியாக, சரிலேறு நீக்கெவ்வறு படத்தில் மகேஷ்பாபு ஜோடியாகவும் நடித்தார். அப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. அடுத்து தமிழில் கார்த்தி ஜோடியாகச் சுல்தான் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.

ராஷ்மிகா நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை. அவரிடம், நீங்கள் முதலில் தியேட்டரில் சென்று பார்த்த படம் எது? என்று ஒரு ரசிகர் கேட்டிருந்தார். அதற்குப் பதில் ராஷ்மிகா, கில்லி படத்துக்கு என்னை எனது தந்தை அழைத்துச் சென்றதாக ஞாபகம். அதுபற்றி அவரிடம் கேளுங்கள். முன்பெல்லாம் அவர் அதிகமாக சினிமா பார்ப்பவராக இருந்தார். நான் நடிகையான பிறகு அவர் அப்படிப் பார்ப்பதில்லை” என்றார்.

விஜய் நடித்த கில்லி படத்தைப் பார்த்தாக ராஷ்மிகா கூறியதற்கு மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் விஜய் ரசிகர்கள் சீக்கிரமே தளபதிக்கு ஜோடியாக உங்களைப் பார்க்க ஆசைப்படுகிறோம் என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

More News >>