திரிபுரா மாநில புதிய முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு
அகர்தலா: திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக ஆட்சி அமைத்து வந்த மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து பாஜக பெரும்பாண்மையுடன் வெற்றிப்பெற்றது.
குறிப்பாக, திரிபுரா பூர்வக் குடிகள் கட்சி - பாஜக கூட்டணி 43 இடங்களில் வெற்றிப் பெற்றது. இதில், பாஜக மட்டும் 35 தொகுதிகளை கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் வெற்றிப்பெற்றது. ஆனால், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை.
இந்நிலையில், திரிபுரா மாநில முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பண்ணாமலிபூர் தொகுதியில் வெற்றிப்பெற்ற பிப்லாப் குமார் தேப் ஒரு மனதாக திரிபுரா மாநில முதல்வராக, தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, துணை முதல்வராக ஜிஸ்னு தேவ் பர்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மார்ச் மாதம் 9ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.