4 வருட இருண்ட காலத்திலிருந்து மீண்டது எப்படி.. சுஷ்மிதா ஒபன் டாக்..

1994ம் ஆண்டு உலக அழகியாகத் தேர்வானவர் சுஷ்மிதா சென். தமிழில் ரட்சகன் படத்தில் கதாநாயகியாக நடித்ததுடன் முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி.. என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2014 ஆண்டு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாத புதுவித நோய்க்கு உள்ளானார். இதனால் வாழ்க்கையின் மீதான பிடிமானத்தை இழந்து தவித்தார். 4 வருடங்கள் அவரது வாழ்க்கை இருண்ட காலம்போல் ஆகிவிட்டது. இதுபற்றி சுஷ்மிதா கூறியதாவது:கண்களுக்குக் கீழ் கருவளையங்கள் சூழ்ந்தன. இதற்கான அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகள் எடுத்துக்கொண்டபோது மயக்கத்தால் பாதிக்கப்பட்டேன். இதுபோன்ற ஒரு குறைபாடுள்ள நோயுடன் வாழ்வது வேதனையானது, நடந்தது நடந்து விட்டது. இதிலிருந்து மீள்வதற்கு வழி இருக்கிறதா என்று ஆராய்ந்தேன்.

தியான முறைகளை கற்றதுடன் நுன்சக்கு பயிற்சி செய்யத் தொடங்கினேன். இதனால் அமைதியின்மை தீர்ந்தது. வலிகளை எதிர்த்துப் போராடியபோது அது ஒரு கலை வடிவமாக மாறியது. எனது உடலில் அட்ரினல் கிளாண்டுகள் செயல் படத்தொடங்கின. தொடர் பயிற்சியில் கடந்த 2019 ம் ஆண்டு முற்றிலுமாக அந்த நோயிலிருந்து மீண்டேன். அதற்காகப் பயிற்சி அளித்த ஆசிரியர் நுபுர் ஷிக்ஹரெவுக்கு நன்றி. நம்முடைய உடல் நிலை பற்றி நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது அதனை நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள்.இவ்வாறு சுஷ்மிதா சென் கூறினார்.

More News >>