கேஜிஎப் 2 போஸ்ட் புரொடக்‌ஷன் தொடக்கம்..

கொரோனா லாக் டவுனில் முடங்கி இருந்த தமிழ்நாட்டில் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க கடந்த வாரம் அரசு அனுமதி வழங்கியது. கர்நாடகாவிலும் திரைப்படங்களுக்கு போஸ்ட் புரொடக் ஷன் பணிகளுக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பணிகள் தொடங்கின.நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வரும் கேஜிஎப் படத்தின் 2ம் பாகத்துக்கான இசை கோர்ப்பு பணிகள் தொடங்கின. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. ஏற்கனவே முடிக்கப்பட்ட காட்சிகளுக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் ஜரூராக தொடங்கி இருப்பதாகப் படத் தரப்பு தெரிவித்துள்ளது.

More News >>