30 வயதில் ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம்.. காதலியுடன் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி..

2008 ஆம் ஆண்டு வெளியான ட்விலைட் திரைப்படத்தில் பெல்லா ஸ்வானின் (கிறிஸ்டன் ஸ்டீவர்ட்) வகுப்புத் தோழனாக நடித்ததில் மிகவும் பிரபலமான நடிகர் கிரிகோரி டைரி பாய்ஸ். தனது 30 வயதில் லாஸ் வேகாஸ் இல்லத்தில் இறந்து கிடந்தார் என்று அமெரிக்க நாளிதழ் தெரிவித்துள்ளது.கிரிகோரி தனது காதலி நடாலி அடெபோஜுவுடன் இறந்து கிடந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இருவரும் எப்படி இறந்தார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடக்கிறது.

30 வயதான நடிகர் கிரிகோரி 2008 ஆம் ஆண்டு ட்விலைட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் பெல்லா ஸ்வானின் வகுப்புத் தோழராக டைலர் க்ரோலி என்ற பெயரில் நடித்தார். ரத்த காட்டேரியாக இதில் கிரிகோரி நடித்திருந்தார்.நடிகரின் மறைவுக்கு ரசிகர்கள் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More News >>