பேட்ட வில்லனை துரத்தி வந்த டைவர்ஸ் நோட்டீஸ்.. வாட்ஸ் ஆப்பில் ஷாக்..

ரஜினி நடித்த 'பேட்ட' பட வில்லன் நடித்த நவாஸுதின் சித்திக் உடல் நலமில்லாத தனது தாயைப் பார்க்க உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றார். அவர் அங்குச் சென்று சேர்வதற்குள் அவரது வாட்ஸ் ஆப் அவரது மனைவி ஆலியா வாட்ஸ் ஆப் மற்றும் இமெயில் விவாகரத்து கேட்டும், இழப்பீடு கேட்டும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

கணவருக்கு விவாகரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதை உறுதி செய்தார் ஆலியா ஆனால் எதற்காக விவாகரத்து கேட்கிறார் என்பதற்கான காரணத்தைக் கூற மறுத்துவிட்டார். நவாஸுதினுக்கும் ஆலியாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இருவருக்கும் மனக்கசப்பு இருந்து வந்தாக தெரிகிறது. விவாகரத்து நோட்டீஸுக்கு நவாஸுதீன் இன்னும் பதில் அளிக்கவில்லை.

More News >>