கடவுளே ஏன் என் கண்ணைப் பறித்தாய்.. இயக்குனர் செல்வராகவன் உருக்கம்..

தனுஷ் நடித்த காதல் கொண்டேன், புதுப்பேட்டை, சூர்யா நடித்த என் ஜி கே, கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருத்தன் போன்ற படங்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர் இயக்குனர் செல்வராகவன். அவரது ஒரு கண்ணில் பார்வை கிடையாது. இது சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனை அன்றைக்கு தனக்கு ஏற்பட்ட அவமானம் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி அவர் தனது 14 வயது நினைவுகளுடன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அன்பு செல்வா (வயது 14) என் தோற்றத்தைப் பார்த்து உலகம் சிரிக்கிறது. என் பார்வை இழப்பு குறைபாடும் அதற்குக் காரணம். எங்குச் சென்றாலும் மக்கள் என்னை கிண்டல் செய்தார்கள். ஒவ்வொரு இரவும் கதறி அழுதேன். சில சமயம் கடவுளே ஏன் எனக்கு இப்படிச் செய்தாய், எதற்காக என் பார்வையைப் பறித்தாய் என்பேன். அப்போது என் மனதுக்குள் ஒரு குரல் சொன்னது, கவலைப்படாதே செல்வா சரியாக இன்னும் 10 ஆண்டுகளில் நீ ஒரு சிறப்பான கதை அமைத்து பிளாக் பஸ்டர் வெற்றிப் படத்தை வழங்குவாய். அது உன் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றும், உன்னைப் பரிகாசித்த இதே உலகம் உன்னை உற்று நோக்கும். உன் திறமையை மதிக்கும், மரியாதையுடன் பார்க்கப்படு வாய். 10 வருடங்களில் தமிழ் சினிமாவில் புதிய டிரெண்டு அமைப்பாய். உன்னை மக்கள் ஜீனியஸ் என்று புகழ்வார்கள்.

இத்தருணத்தில் உனது கண் குறைபாட்டை பார்க்க மாட்டார்கள். எனவே மகிழ்ச்சியாக இரு புகைப்படங்களுக்குச் சிரித்த முகத்துடன் போஸ் தா. உன்னை நிறையப் புகைப்படங்கள் எடுப்பார்கள். உன்னையே நீ விரும்பு.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் செல்வராகவன் தற்போது தனது வயது 45 எனக் குறிப்பிட்டுள்ளார்.

More News >>