கமல்ஹாசன் இயக்கத்தில் விஜய் சேதுபதி.. தேவர் மகன் பார்ட் 2 உருவாகிறது..

கமல்ஹாசன், விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல் பரவிவருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் இருவரும் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினார்கள். தற்போது இருவரும் இணையும் படம் எது என்பது தெரிய வந்துள்ளது.கடந்த 1992ம் ஆண்டு உருவான படம் தேவர் மகன்.

இதில் சிவாஜி, கமல்ஹாசன், நாசர் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகம் உருவாக்கக் கமல் முடிவு செய்திருக்கிறார். கதைப்படி தேவர் மகனில் நாசரைக் கமல் கொன்றுவிடுவார். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாகிவிருக்கிறது.நாசர் மகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். தந்தையைக் கொன்ற கமலை பழிவாங்கத் துடிக்கும் கதாபாத்திரமாக விஜய் சேதுபதி பாத்திரம் அமையவிருக்கிறது. இப்படத்துக்கு தலைவன் இருக்கிறான் எனப் பெயரிடப்பட உள்ளது.லைகா நிறுவனத்துடன் இணைந்து கமலின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகத் தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க உள்ளார்.

More News >>