தந்தையை நினைத்து அதர்வா உருக்கம்.. நினைக்காத நாளில்லை..

இதயம் முரளி சினிமாவில் தனக்கென ஒரு பாணியை கடைப்பிடித்து நடித்து வந்தார். யாரும் எதிர்பாராதமாக கடந்த 2010ம் ஆண்டு காலை திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். பிறகு அவரது மகன் அதர்வா நடிக்க வந்தார். பாணா காத்தாடி படத்தில் அறிமுகமானார். நேற்று முரளியின் 56வது பிறந்ததினம். தந்தையின் பிறந்தாளில் அதர்வா உருக்கமான வாழ்த்து தெரிவித்திருந்தார்.

உறுதியானவரும், இனிமையானவருமான அப்பாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் பிரிவால் வாடுகிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தான் குழந்தையாக இருந்தபோது தோளில் தூக்கி வைத்துக்கொண்டு கடற்கரையில் முரளி விளையாடும் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.அதர்வா தற்போது குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே, ஒத்தைக்கு ஒத்தை,ருக்குமணி வண்டி வருது படங்களில் நடித்து வருகிறார்.

More News >>