ரிலீஸுக்கு காத்திருக்கும் சுமார் 90 படங்கள்.. தியேட்டர்கள் திறப்பு எப்போது?

கொரோனா லாக்டவுனில் 50 நாட்கள் கடந்த நிலையில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுப் பராமரிப்பின்றி பாழாகிக் கொண்டிருக்கின்றன. ஊரடங்கு முடிந்தாலும் தியேட்டர்கள் திறக்கப்படுமா? அப்படியே திறந்தாலும் ஒரு காட்சிக்கு எவ்வளவு பேர் அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட் கட்டணம் இருமடங்கு அதிகரிக்குமா, தியேட்டர்களில் ஏசி போட அனுமதிக்கப்படுமா. பெரிய படங்கள் வெளியாகுமா என்று பல கேள்விகள் திரையுலகினரை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்நிலையில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் எடிட்டிங் பணிகள் நடக்கிறது. இது தவிர சூர்யாவின் 'சூரரைப்போற்று', ஜிவி.பிரகாஷ் நடித்திருக்கும் 6 படங்கள், சிபி சத்யாரஜ் நடித்திருக்கும் 4 படங்கள், பிரபுதேவா நடித்திருக்கும் 4 படங்கள் என சுமார் 90 படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

இதற்கிடையில் தியேட்டர் அதிபர்கள் வயிற்றில் ஒடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியாவது புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. திரையுலகம் இவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கும் நிலையில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்பட்டு படங்களை ரிலீஸ் செய்து முதலீடுகளை எப்படி மீட்டெடுப்பது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர்கள் திக் திக் மனதுடன் தவிப்பில் உள்ளனர். தீபாவளிக்கு முன்னதாக இந்த 90படங்களும் ரிலீஸ் செய்ய வேண்டிய சூழலுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

More News >>