கொரோனா பாதிப்பு.. மகாராஷ்டிரா அரசுக்கு பவார் கூறிய யோசனைகள்..

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய மகாராஷ்டிர அரசுக்கு சரத்பவார் சில யோசனைகளைக் கூறியுள்ளார்.நாட்டிலேயே கொரோனவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் தற்போது ஊரடங்கு நீடிக்கிறது. எனினும், பொருளாதாரப் பாதிப்புகள் அதிகமாகி வருவதால், பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர கூட்டணி அரசில் பங்கேற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், சில யோசனைகளை அரசுக்குத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் 14 பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதே போல், ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வித் திட்ட நடைமுறைகள் பாதிப்பால், பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இது பற்றி அறிய அரசு ஒரு கமிட்டியை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும். அதே போல், தொழில்துறைகள் மீண்டும் பழைய வேகத்தில் செயல்படுவதற்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் சில பரிந்துரைகளையும் கூறியிருக்கிறார்.

More News >>