வெளியாவதற்கு முன்பே 6 முறை மாஸ்டர் டிரெய்லர் பார்த்த நடிகர்.. தளபதி 64 புது அப்டேட்..

தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். மற்றொரு வில்லனாக அர்ஜுன்தாஸ் நடித்துள்ளார். கைதி படத்தில் இவர் பிரபலமானவர். மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு பட ரிலீஸை தள்ளிப் போட்டிருக்கிறது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிக்கு அனுமதி தரப்பட்டுள்ள நிலையில் படத்தின் எடிட்டிங் பணி நடந்து வருகிறது. ரிலீஸ் பற்றி இம்மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.இதற்கிடையில் இப்படத்தின் டிரெய்லர் எப்போது வரும் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் தகவலை நடிகர் அர்ஜுன்தாஸ் வெளியிட்டிருக்கிறார்.

மாஸ்டர் படத்தின் டிரெய்லரை இதுவரை 6 முறை நான் பார்த்து விட்டேன். டிரெய்லர் மரண மாஸ் ஆக இருக்கிறது. எப்போது டிரெய்லர் வெளியானாலும் அது ரசிகர்களைக் கவரும். விஜய்யுடன் குறுகிய காலத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பெரிய நடிகர் என்ற எண்ணமே இல்லாமல் இயல்பாகப் பழகும் தன்மை கொண்டவர் விஜய் என்றார் அர்ஜுன்தாஸ்.

More News >>