லெனின் ஒரு பயங்கரவாதி அவரது சிலையை ஏன் வைத்திருக்க வேண்டும் - சுப்பிரமணிய சாமி
லெனின் ஒரு அயல்நாட்டவர். ரஷ்யாவில் சர்வாதிகாரத்தை அமல்படுத்தி, எண்ணற்ற மக்களை கொன்ற பயங்கரவாதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை இயந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இது குறித்து முகநூலில் கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, “லெனின் ஒரு அயல்நாட்டவர். ரஷ்யாவில் சர்வாதிகாரத்தை அமல்படுத்தி, எண்ணற்ற மக்களை கொன்ற பயங்கரவாதி.
அத்தகைய ஒருவரது சிலையை நாம் ஏன் இங்கு வைத்திருக்க வேண்டும்? லெனின் சிலையை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் வைத்து அவர்கள் பராமரித்துக் கொள்ளட்டும்” என தெரிவித்துள்ளார்.