விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பேட்ட வில்லன் மனைவி ஆவேசம்.. நவாஸுதின் பற்றிய பயங்கர உண்மைகளை அம்பலப்படுத்துவேன்..
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் பேட்ட. இதில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக். இவரது மனைவி ஆலியா. சில தினங்களுக்கு முன் நவாஸுதினுக்கு வாட்ஸ் ஆப், ஈமெயிலில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இதுபரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆலியாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சில பத்திரிகைகளில் தகவல் வெளிவந்தது. இதையறிந்து ஆவேசம் அடைந்த ஆலியா டிவிட்டரில் பதில் அளித்திருக்கிறார். அவர் கூறியதாவது:நவாஸுதீனும் அவரது உறவுக்காரர்களும் தங்களது தவறுகளை மறைக்க என் பெயரைக் கெடுக்க முயல்கின்றனர். இதற்கெல்லாம் பின்னணியில் என்ன உள்ளது என்ற உண்மை உலகத்திற்கு அம்பலப்படுத்துவேன். நான் அமைதியாக இருக்கிறேன், அதை எனது பலவீனம் என்று எண்ணாதீர்கள். விரைவில் அதிர்ச்சியூட்டும் பயங்கர உண்மைகளை நான் அம்பலப்படுத்த உள்ளேன். என்னை டிவிட்டரில் பின் தொடருங்கள். உங்களுக்கு அந்த விவரம் தெரிய வரும். வேறு ஒருவருடன் எனக்கு தொடர்பு இருப்ப தாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. இப்படிப் பட்ட சூழலில் என்னைப்பற்றிய உண்மையை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தவறான பிராசாரம் செய்தலும் உண்மையை மறைக்க முடியாது.இவ்வாறு ஆலியா தெரிவித்திருக்கிறார்.