இந்தியாவில் இது வரை ஒரு லட்சத்து 12,359 பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 12,359 பேராக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. நேற்று வரை ஒரு லட்சத்து 1139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்று மட்டும் புதிதாக 5609 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 12,359 பேராக அதிகரித்துள்ளது. இதில் 45,300 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 63,624 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக 39,297 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதே போல், தமிழகத்தில் 13,191 பேருக்கும், குஜராத்தில் 12,537 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஜனவரி 31ம் தேதி, கேரளாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின், 100 பேருக்கு பரவிய நாளில் இருந்து 64 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு இந்நோய் பரவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More News >>