இந்தியாவில் ஒரே நாளில் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா..

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 6,088 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இந்தியாவில் தினமும் புதிதாக நான்கைந்து ஆயிரம் பேருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 6,088 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 18,447 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்துக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 48,534ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 3583 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 41,642 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில், 1454 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,726 ஆக உள்ளது.

இந்தியாவில் ஜனவரி 31ம் தேதி, கேரளாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின், 100 பேருக்குப் பரவிய நாளிலிருந்து 64 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு இந்நோய் பரவியிருக்கிறது. அதே சமயம், அமெரிக்காவில் 25 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. அந்த வகையில் அமெரிக்கா போன்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைவாகவே உள்ளது. அதே போல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் விகிதமும் இந்தியாவில் 3 சதவீத அளவாகவே உள்ளது. அதே சமயம், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 7 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>