முடியும் தருவாயில் தளபதியின் மாஸ்டர்.. புதிய அப்டேட்..

தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே இப்படம் வெளிவருவதாக இருந்தது. கொரோனா தடையால் இதன் இறுதிக் கட்ட பணிகள் தடைப்பட்டது. சமீபத்தில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி தற்போது நிறைவடையும் நிலையை எட்டியிருக்கிறது எனப் படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், அர்ஜூன் தாஸ். மாளவிகா மோகனன். ஆண்ட்ரியா நடித்துள்ளனர். அனிரூத் இசை அமைத்திருக்கிறார்.

More News >>