சதவீத அடிப்படையில் சம்பளம் படத்தில் சத்யராஜ், பார்த்திபன், விஜய்சேதிபதி.. கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்..

பட விற்பனைக்கு ஏற்ப சதவீத அடிப்படையில் சம்பளம் வாங்கிக்கொண்டு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் சத்யராஜ். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இது பற்றி சினிமா தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:கொரோனா காலத்தில் சினிமாவில் புது முயற்சி பற்றி தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் என்னிடம் பேசினார். அப்போது பட விற்பனையின் சதவீத அடிப்படையில் நடிகர், இயக்குனருக்கு சம்பளம் தருவதுபற்றி குறிப்பிட்டார். அதுபற்றி தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியிடம் பேசினேன். அவரும் நல்ல ஐடியா என்றார்.

இதற்கான கதையை வெங்கட் உருவாக்கி உள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் கதையைக் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது செய்யலாம் என்றார். இவர் பட விற்பனையின் அடிப்படையில் சதவீத முறையில் சம்பளம் பெற்றுக்கொள்ளச் சம்மதித்திருக்கிறார். அதே அடிப்படையில் சத்யராஜ் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். பார்த்திபன், விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர்.

ரூ 2 கோடி செலவில் இப்படம் தயாரிக்கப் படவுள்ளது. சூப்பர்குட் பிலிம்ஸ் பேனரில் சவுத்ரியும், நானும் இணைந்து தயாரிக்கிறோம். மற்றவர்களுக்கும் தயாரிப்பில் வாய்ப்பு தரும் வகையில் 200 ஷேர்கள் உருவாக்கி சினிமா சம்பந்தப்பட்டவர்கள் ஒரு ஷேர் 1 லட்சம் வீதம் முதலீடு செய்யலாம். யாரும் ஷேர் வாங்க வரவில்லையென்றால் நாங்கள் இருவருமே இப்படத்தை தயாரிப்போம். இப்படம் திரை அரங்கில் மட்டும் வெளியிடப்படும் ஒன்லி ஃபார் தியேட்டர் (ஒ எஃப் டி). 100 நாட்களுக்கு பிறகுதான் ஒடிடி போன்றவற்றில் வெளி வரும். மொத்தம் 60 நாட்களில் படம் முடிக்கப்படும்.

இவ்வாறு திருப்பூர் சுப்ரமணியம் கூறினார்.

More News >>