சிரியாவிற்கு சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதில் 39 பேர் பலி

மாஸ்கோ: சிரியாவிற்கு சென்ற ரஷ்ய சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் இதுவரை 39 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிரியாவில் ஏற்கனவே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனால், அந்நாட்டு அதிபருக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் சண்டையிட்டு வருகிறது. இந்நிலையில், சிரியாவின் லடாகியா மாகாணத்தில் உள்ள ஹேமிமின் விமான படைத்தளத்திற்கு ரஷ்ய விமானம் சென்ற போது விபத்தில் சிக்கியது.

இந்த விமானத்தில் பயணம் செய்த 26 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என மொத்தம் 32 பேர் உயிர் இழந்ததாக தகவல் வெளியானது. இந்த விபத்து குறித்த நடத்திய முதற்கட்ட விசாரணையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது. இதில், பயணிகள் 33 பேர் என்றும், விமான நிறுவன ஊழியர்கள் 6 பேர் என்றும் தெரியவந்துள்ளது.

More News >>