வசந்த மாளிகை நடிகை வாணி ஸ்ரீ மகன் திடீர் மரணம்.. இயற்கை மரணமா? தற்கொலையா? என சந்தேகம்

சிவாஜியுடன் வசந்த மாளிகை, வாணி ராணி, எம்ஜிஆருடன் ஊருக்கு உழைப்பவன். கண்ணன் என் காதலன் படங்களில் நடித்ததுடன் பல்வேறு தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் வாணி ஸ்ரீ. இவரது மகன் அபினய் வெங்கடேஷ். டாக்டருக்கு படித்த இவர் பெங்களூருவில் உள்ள மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். 36 வயதாகும் இவர் திடீர் மரணம் அடைந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் இருக்கின்றனர்.

அபினய் மாரடைப்பில் மரணம் அடைந்தார் என்று கூறப்பட்டாலும் அவர் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சனை காரணமாக மன வருத்தத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>