சமந்தா வீட்டுக்கு வந்த புது உறவு.. இந்த ஆண்டில் வந்த நல்ல சேதி..

நடிகர் ராணா, காதலி மிஹீகா திருமண நிச்சயதார்த்தம் கொரோனா தடை காலத்தில் எளிமையாக அதுவும் சத்தமில்லாமல் ஐதராபாத்தில் ரகசியமாக நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் பயம் காரணமாக குடும்பத்தினர் யாரும் இதனை உறுதி செய்யவில்லை. ராணா தனது காதலி மிஹீகாவுடன் புதுமாப்பிள்ளைபோல் பட்டு வேட்டி, பட்டு சட்டையுடனும் மிஹீகா பட்டு புடவையுடனும் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இது அதிகாரப்பூர்வ புகைப்படம் என்று மெசேஜ் வெளியிட்டார்.

இந்நிலையில் நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில், குடும்பத்துக்கு வந்த புது உறவு. இந்த ஆண்டு நல்ல சேதி கொண்டு வந்த ராணா. மிஹீகாவுக்கு நன்றி என குறிப்பிட்டிருக்கிறார்.அத்துடன் ராணா, மஹீகா மற்றும் தனது கணவர் நாக சைதன்யா குடும்பத்தினருடன் இருக்கும் குரூப் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார் சமந்தா.

More News >>