இந்தியாவில் ஒரே நாளில் 6767 பேருக்கு பரவியது கொரோனா தொற்று.. 1.32 லட்சம் பேருக்குப் பாதிப்பு

இந்தியாவில் இது வரை ஒரு லட்சத்து 31,868 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 6767 பேருக்குப் பரவியிருக்கிறது. இது வரை கொரோனாவுக்கு 3867 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. தினமும் புதிதாக 5, 6 ஆயிரம் பேருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது.

இன்று(மே 24) காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 31,868 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 54,440 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 73,560 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் நேற்று உயிரிழந்த 147 பேரையும் சேர்த்து இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 3867 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஜனவரி 31ம் தேதி, கேரளாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின், 100 பேருக்குப் பரவிய நாளிலிருந்து 64 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு இந்நோய் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 47,190 பேருக்கும், தமிழகத்தில் 15,512 பேருக்கும், குஜராத்தில் 13,268 பேருக்கும், டெல்லியில் 12,910 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

More News >>