நடிகர் கேன்சர் நோயால் மரணம்.. நடிகை பரிணிதி சோப்ரா இரங்கல் ..
பிரபல பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர், இர்பான் கான் சமீபத்தில் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். முன்னதாக இருவரும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர்கள். இவர்களின் இழப்பை எண்ணி பாலிவுட் கலங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு இளம் நடிகர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு நேற்று மரணம் அடைந்தார்.
2011ம் ஆண்டு சல்மான்கான் நடித்த ரெடி இந்தி படத்தில் அவருடன் இணைந்து நடித்தவர் மோஹித் பாகல். பின்னர் 2019ம் ஆண்டு பரிணிநிதி சோப்ரா, சித்தார் மல்ஹோத்ரா நடித்த, ஜபாரியா ஜோடி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தவிர டிவி ஷோக்களிலும் பங்கேற்றிருக்கிறார். மோஹித் மதுராவில் வசித்து வந்தார். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு சித்தார்த் மல்ஹோத்ரா, பரிணிநிதி சோப்ரா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.