லாரன்ஸ் போஸ்டருக்கு முத்தம் தந்த சிறுவன்.. சந்திக்க நடிகர் விருப்பம்..

நடிகர் லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது போஸ்டருக்கு சிறுவன் ஒருவன் முத்தம் தரும் போஸ்டரை வெளியிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார். அதில்,இந்த சிறுவனின் புகைப்படத்தை எனக்குப் பகிர்ந்த எனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சுதாகர், ஷங்கருக்கு நன்றி. இந்த சிறுவனைப் பார்க்கும்போது எனக்கு என்னுடைய பழைய நினைவுகள் வந்து விட்டன. அந்த சிறுவனைப் போல் தான் நானும் போராடிக்கொண்டிருந்தேன். அவனை நான் சந்திக்க விரும்புகிறேன். விரைவில் சந்திப்பேன். அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. சேவைதான் கடவுள் என குறிப்பிட்டிருக்கிறார் லாரன்ஸ்.

More News >>