எச்.ராஜாவின் இனம் அமைதியாக வாழ வேண்டாமா? - கொளத்தூர் மணி எச்சரிக்கை
எச்.ராஜாவை அமைதியாக இருக்கச்சொல்லுங்கள். அப்போதுதான் நீங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழகமெங்கும் கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இதற்கு பதிலளித்து பேசிய, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “எச்.ராஜா எந்த இனத்திற்காக பேசுகிறாரோ அந்த இனத்திற்கே ஆபத்தாக வந்துவிடலாம் என்பதால் அந்த இனத்தை சார்ந்தவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
தயவு செய்து எச்.ராஜாவுக்கு அறிவுரை சொல்லுங்கள், அமைதியாக இருக்கச்சொல்லுங்கள். அப்போதுதான் நீங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்பதை அந்த இன மக்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன்” என்றார்.