இந்தியாவில் கொரோனா பலி 4021 ஆக அதிகரிப்பு.. 1.38 லட்சம் பேருக்கு நோய் பாதிப்பு..

இந்தியாவில் இது வரை ஒரு லட்சத்து 38,845 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. கொரோனாவால் 4021 பேர் உயிரிழந்தனர். சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் ஒரு லட்சம் பேருக்கு மேல் பரவியுள்ளது.

இன்று(மே 25) காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 38,845 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 57,720 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 77,103 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் நேற்று உயிரிழந்த 154 பேரையும் சேர்த்து இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 4021 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஜனவரி 31ம் தேதி, கேரளாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின், 100 பேருக்கு பரவிய நாளில் இருந்து 64 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு இந்நோய் பரவியிருக்கிறது.தற்போது அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 47,500 பேருக்கும், தமிழகத்தில் 16,277 பேருக்கும், குஜராத்தில் 13,500 பேருக்கும், டெல்லியில் 13 ஆயிரம் பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

More News >>