ரசிகர்களின் கேள்விக்கு ஸ்ருதியின் விளையாட்டு பதில்.. குக் குக் குக்...

நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா தடை காலத்தில் வீட்டுக்குள் முடங்கியிருந்தாலும் இசை அமைத்துப் பாடல் பாடுவது, செல்லப் பூனையுடன் கொஞ்சி விளையாடுவது என்று தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார். ரசிகர் ஒருவர் கொரோனா காலத்தில் வீட்டில் வெறென்ன செய்கிறீர்கள் என்றதற்கு ஜாலியாக பதில் அளித்திருக்கிறார் ஸ்ருதி. இந்தி படமொன்றில் மாதுரி தீட்சித பாடி ஆடிய சோலி கே பீச்சே கியா ஹை பாடல் படத்தை வெளியிட்டுள்ள ஸ்ருதி அதில் வரும் ஹம்மிங்கான குக் குக் குக் என்று எழுதிக் காட்டி தான் சமையல் செய்வதாக மறை முகமாகத் தெரிவித்துக் கவர்ந்திருக்கிறார்.

More News >>