தமிழகத்தில் இதுவரை 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் இது வரை 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமே 11,131 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி மாநிலங்களில் அதிகமாகப் பரவியிருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் நோயின் தாக்கம் உள்ளது.

தமிழகத்தில் தினமும் புதிதாக 600, 700 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று(மே25) மட்டும் புதிதாக 805 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 93 பேரும் அடக்கம். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 87பேர், கேரளா 2, ஆந்திரா 1, குஜராத் 3 என்று 93 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது.

இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,082 பேராக அதிகரித்துள்ளது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 407 பேரையும் சேர்த்து மொத்தம் 8731 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 7 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே நேற்று 11,428 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில்தான் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. சமூக பரவல் ஏற்படவில்லை என்று தமிழக அரசு கூறி வந்தாலும், தினமும் 500 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 548 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 11,131 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5735 பேர் குணமடைந்துள்ளனர்.

இது தவிரச் செங்கல்பட்டில் 54 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 19 பேருக்கும், திருவள்ளூரில் 36 பேருக்கும், திருவண்ணாமலை 11 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

More News >>