சச்சின், அம்லாவுக்குப் பிறகு அரிய சாதனை நிகழ்த்திய கெய்ல்!

உலகில் இதுவரை சச்சின் டெண்டுல்கர் மற்றும் அசீம் அம்லா ஆகியோர் மட்டுமே நிகழ்த்தியிருந்த சாதனையைத் தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெய்லும் நிகழ்த்தியுள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் இந்த சீசனில் கெய்லை எந்த அணியும் எடுக்காமல் இருக்கலாம். ஆனால் அவரோ, `என்னை ஏன் எடுக்கவில்லை?’ என்று கேள்வி கேட்கும் தொனியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த ஆண்டு விளையாடப்படவுள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி நேரடியாகத் தேர்வாகவில்லை. இதனால், தற்போது தகுதி பெறும்  சுற்றில் ஆடி வருகிறது.

இந்தச் சுற்றில் நேற்று மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஐக்கிய அரபு அமீரகம் அணியுடன் மோதியது. மிகவும் பலம் பொருந்திய மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் அந்த அணி 357 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் கெய்ல், 91 பந்துகளில் 123 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கும் 11 அணிகளுக்கு எதிராக சதம் விளாசியவர் என்ற பெருமையைப் பெற்றார் கெய்ல்.

இதற்கு முன்னர் இந்தச் சாதனையை சச்சின் டெண்டுல்கர் மற்றும் அசீம் அம்லா ஆகியோர் மட்டுமே நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>